சற்று முன் யாழ் பருத்துறையிலிருந்து சென்ற பேரூந்து ஓமந்தையில் விபத்து!! பற்றி எரிகின்றது!! (Photos)
`சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வானுமே மோதியுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தார்கள் அம்புலன்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் பலியாகியதுடன் இருபதுபேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது ( இரவு 9.15) விசேட அதிரடிப்படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்




விபத்து நடந்த துல்லியமான இடம் இதுதான்…
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்து – சொகுசுக் கார் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் சொகுசுக் காரில் பயணித்தவர்களே உயிரிழந்தனர்.
பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ சொகுசுக் காருக்கும் பரவியதால் அதன் சாரதி எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது – 83), ஆறுமுகம் தேவராஜா (வயது – 62), தேவராஜா சுகந்தினி (வயது – 51), தேவராஜா சுதர்சன் (வயது – 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது – 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது – 29) காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை நடந்த விபத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக பஸ்சை திட்டமிட்டோ எரித்துள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.
காரைநகர் வர்த்தகர்

வாகனச் சாரதி

தாயும் மகனும்


