Home புதினங்களின் சங்கமம் காங்கேசன்துறைக் கடலில் சிங்கள இளைஞனை அள்ளிச் சென்றது கடல் அலை!!

காங்கேசன்துறைக் கடலில் சிங்கள இளைஞனை அள்ளிச் சென்றது கடல் அலை!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்து காங்கேசன்துறை கடற்பகுதியில் நீராடிய மலையகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இன்று (05) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாத்தறை – தெனியாய பிரதேசத்தை சேர்ந்த செல்வநாயகம் அலெக்சென்டர் (21-வயது) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் தெனியாய பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு தம்பிகள், ஒரு தங்கை ஆகியோருக்கு மூத்த சகோதரரான இந்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தினால் அவரது பெற்றோர் பெரும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.