புதினங்களின் சங்கமம்

கடும் மழையின் எதிரொலி!! யாழ் தொண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு!! (

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தொண்டைமானாறு கடலேரி வான் கதவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளன.

அச்சுவேலி- இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தினால் குறித்த வான்கதவுகள் திறந்து வைக்கப்பட்டன.

வான் கதவினை யாழ்.மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வராஜா உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.

அத்துடன் தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதற்கான முனை பிரதேசம், தொண்டைமானாறு அக்கறை பிரதேச மக்களால் கால்வாயாக வெட்டி விடப்பட்டது.

Image may contain: one or more people, people standing, sky, cloud and outdoorImage may contain: one or more people, people standing, sky and outdoor