புதினங்களின் சங்கமம்

கனரக வாகனம் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு – வவுனியாவில் சோகம்

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.