புதினங்களின் சங்கமம்

இந்தியாவிலிருந்து தீவுக்குள் நுழைந்து கொள்ளையடித்த கொள்ளயார்கள்!! (Photos)

பொருள் விற்பனையாளர் போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் நாரந்தனை பகுதிகளில் அண்மைக்காலமாக மேற்குறித்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மண்டைத்தீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற இரு இந்திய பிரஜைகள் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருந்தனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர். இதனடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனையின் படி கொள்ளையடித்த நகைகள் பொருட்களுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த மேற்குறித்த இரு இந்தியபிரஜைகயும் துரத்தி சென்று பொலிஸார் கைது செய்ததுடன் விசாரணையும் செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வங்கி அட்டைகள் கடவுச்சீட்டுகள் கடவுள் விக்கிரகங்கள் இந்திய நாணயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இப்பகுதியில் ஆடுகள் மாடுகள் கடத்தல் முறியடிக்கப்ட்டுள்ள நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் விஸ்தீரணத்துக்கேற்ப பொலிஸாரின் ஆளணி வளம் பொதுமானதாக இல்லாமையே இவ்வாறான பல சமூகவீரோதச் செயற்பாடுகள் அதிகரிக்கக் காரணம் என் சமூக நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.