புதினங்களின் சங்கமம்

ரணில் அன்னத்துக்கு வாக்களிக்கவில்லை!! அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடுகின்றார் அனுரா!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தனது வாக்கை பயன்படுத்தினாரா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுத்துள்ளது.

இவ்வாறு சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் அனுரகுமார திஸாநாயக்க.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது வாக்கைப் பயன்படுத்திய, ரணில் விக்கிரமசிங்க, வாக்குச்சீட்டில் மேலே இருந்த சின்னமொன்றுக்கே தனது வாக்கை அளித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயகக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, பிரதமர் ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள், கடுமையான சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையிலேயே, அனுரகுமார திஸாநாயக்க இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.