பதவியேற்றவுடன் அரச உத்தியோகத்தர்களுக்கு கோத்தா வைத்த ஆப்பு!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச உத்தியோகத்தர்கள் அரச அணுசரணையுடன் வெளிநாடுகளுக்கு பயணமாவதை இடைநிறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பணித்துள்ளார்.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநரின் செயலாளர்களுக்கு இந்தப் பணிப்புரை ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்தப் பணிப்புரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர், செயலாளர்கள் தமக்குக் கீழ் வரும் பணித்துறையினருக்கு இந்த பணிப்புரையை நடைமுறைப்படுத்துமாறும் சுட்டிக்காட்டியுள்ளார்.

