Home புதினங்களின் சங்கமம் கோத்தபாயா அறுதிப் பெரும்பாண்மையுடன் ஜனாதிபதியானார்!!

கோத்தபாயா அறுதிப் பெரும்பாண்மையுடன் ஜனாதிபதியானார்!!

கோத்தபாய ராஜபக்ச அறுதிப் பெரும்பாண்மையுடன் ஜனாதிபதியானார் என அவரது முகப்புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி அமைதியாகவும் சமாதானமான முறையில் கொண்டாடுமாறு நாட்டு மக்களிடம் பொதுஜன பெரமுன கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதே வேளை கோத்தபாயாவை இந்தியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி உட்பட்டவர்கள் வாழ்த்தி வருகின்றார்கள்.

 

Image may contain: 1 person, smiling, text