புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கள்ளச்சாமி சரவணபாவாவின் திருவிளையாடலை பதிவிட்ட லண்டன் தமிழனை கெஞ்சி கூத்தாடி பதிவை அகற்றிய விசரிகள்!!!!

லண்டனில் வாழும் தமிழன் ஒருவரின் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்………

நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஒரு சாமியார் என சொல்லப்படுபவரால் ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்பட்டு தங்கள் பணத்தை இழக்கிறார்கள் என்பது தொடர்பான பதிவொன்றை எழுதியிருந்தேன்.
பல ஆதாரங்கள் இருந்த போதும் வெளியே போடக்கூடிய ஒரு ஆதாரத்தை இணைத்திருந்தேன். அந்த வீடியோ Editing செய்யப்பட்ட வீடியோ என அவரது பக்தர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த வீடியோ edit செய்யப்பட்டது தானா என்பதற்கான ஆதாரங்களை தேடி பார்க்க யாரும் தயாராக இல்லை.
வெளியே வந்த வீடியோக்கள் இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். தங்கள் விருப்பின் பெயரில் அதனை செய்திருக்கலாம். அதனுள் தலைபோட நான் விரும்பவில்லை.
பிரச்சனை என்னவெனில் ஈழத்தமிழர்கள் விரும்பி கொடுக்கும் பணம், இது தட்சணை, டொனேசன், குரு பக்தி, கட்டணம், சந்தா பணம் என என்ன பெயரிலும் அழைக்கப்படலாம். ஆனால் அது உங்களில் ஒருவரால் அல்லது உங்கள் துணையினால் கஸ்ரப்பட்டு உழைக்கப்பட்டது.
அந்த பணம் ஏன் இது போன்ற ஏமாற்றுக்காறர்களிடம் போய் சேரவேண்டும் என்பதே கேள்வி. ஈழத்தில் பலரும் ஏதோ ஒரு வழியில் ஒரு வேளை சோத்துக்கு கஸ்ரப்பட நீங்கள் இப்படி பணத்தை செலவு செய்யலாமா என்பதை சிந்தியுங்கள்.
எங்கள் பணம் நாங்கள் விரும்பி கொடுக்கிறோம், எங்கட மனசு நாங்கள் விரும்பி அவரை குருவானவராக ஏற்கிறோம் என்கிறீர்கள். அந்த பணத்தின் பின்னால் உள்ள வலிகளை நீங்கள் உணரவில்லையா? அதுபோல நீங்கள் எங்கட மக்கள். நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து காப்பாற்ற எங்களுக்கும் உரிமை உண்டு. எவரும் தெரிந்து கொண்டு போய் கிணற்றுக்குள் விழுவதில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை கடைசியில் ஏமாற்றத்தில் முடிவது தவிர்க்க முடியாதவை.
நேற்றைய தினம் என்னால் எழுதப்பட்ட பதிவை தூக்கும் படி பல தமிழ் பெண்கள் போண் போட்டு கேட்டுள்ளீர்கள். அது தவறான தகவல் என சொல்கிறீர்கள். ஆனால் அது தவறான தகவல் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை.
இவளவு தமிழ் பெண்கள் இந்த மூட நம்பிக்கைக்குள் இருக்கிறீர்கள் என்பது உண்மையில் அதிர்ச்சி தருகிறது. அந்த விடயத்தை நான் எழுதியதால் அந்த விடயம் பலருக்கும் சென்றுவிடும் என சொல்கிறீர்கள். ஒரு விடயம் போடப்பட்டால் இதற்கு எதிரான விடயம் உங்களிடம் இருந்தால் அதனையும் தந்தால் நாங்கள் பதிவிட தயார். ஆனால் உங்களிடம் வெறும் மூட நம்பிக்கையை தவிர வேறு ஏதும் ஆதாரங்கள் இல்லை.
உங்களுக்கு உள்ள பிரச்சனை என்னவெனில் பக்தியோ பரவசமோ கிடையாது. ஒருவரை நம்பி நீங்கள் ஏமாந்துள்ளீர்கள். இப்போது இந்த விடயம் வெளியே வந்தால் உங்களை சுற்றியுள்ள உறவுகள், நண்பர்கள் உங்களை ஏளனம் செய்வார்கள். அவர்களது முகத்தில் எப்படி இனி முழிப்பது என ஆத்திரம் கொள்கிறீர்கள்.இதைவிட உங்களுக்கு வேறெந்த ஆதங்கமோ, சமூக அக்கறையோ கிடையாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எமது தமிழ் பெண்கள் பலரும் அந்த பதிவை தூக்கும் படி கேட்டதால் உங்களை அவமானப்படுத்த கூடாது, நீங்கள் உங்கள் உறவுகளிடம் தலைகுனிய கூடாது என்பதற்காக பதிவை மறைத்துள்ளேன். அதன் அர்த்தம் போடப்பட்ட விடயம் தவறு என்பதல்ல. உங்கள் மீது கொண்ட மரியாதைக்காக மட்டுமே.
எங்கள் பணம், நாங்க என்னவும் செய்வோம் என்றீர்கள். உங்களை காப்பாற்றுவதை விட ஏதுமே அறியாமல் போய் மாட்டிக்கொள்ளும் அப்பாவிகளை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம்.
அனைவரும் சமூக அக்கறையோடு இருங்கள்.
நன்றி. தொடர்ந்து பேசுவோம்.

 ஏற்கனவே எமது வம்பன் இணையத்தளத்தில் வெளியாகிய பதிவினை கீழே தந்துள்ளோம்…

https://vampan.net/45175/