யாழ் சாராய கடைகளின் திருகுதாளங்கள்!! புகையிலையை ஊற வைத்து கலப்படம்!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சாராயக்கடைகளில் சாராயம் வாங்கிக் குடிப்பவர்களுக்கு சாராயகடை ஊழியர்களும் முதலாளியும் அலங்கோலங்கள் செய்து வருவதாக சாராய பிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டுப் புகையிலையை தண்ணீரில் அவித்து ஏதோ ஒரு இனந்தெரியாத இரசாயணத்தையும் கலந்து சரிக்கு அரைவாசியாக சாராயத்தில் கலந்து விற்பதாக அவர்கள் அதிர்ச்சித் தகவல்கள் வெளியிட்டுள்ளார்கள். இதைக் குடிப்பவர்களுக்கு வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்றுளைவு போன்றவை வருவதாகவும் அவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாராயபிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிகாரர்களின் விளிப்புணர்வுக்காக இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்………

