யாழ் ரயில் விபத்து நிசாந்தனின் மரணம் கூறுவது என்ன? நில், நிறுத்து, நிதானி, கவனி, கட……
அன்பு வாசகர்களே….வாசித்த பின்னர் பகிருங்கள்… பல உயிர்களைக் காப்பாற்றலாம்…..
நேற்றையதினம் எனதருமை நண்பன் நிசாந்தன்(சாந்து) அன்னசத்திர லேன் முதலாம் ஒழுங்கையின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையினைக் கடக்கும்வேளையில் இறைபமடைந்துவிட்டான். அவனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவனுடைய குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்…
நண்பர்களே புகையிரதம் தண்டவாளத்தில் இயங்கிக்கொண்டு வரும்வேளையில் கடவையினை கடக்க எத்தணிக்காதீர்கள். எந்த அவசரநிலை என்றாலும் சிலநிமிடங்கள் காத்திருங்கள் புகையிரதம் முழுமையாக சென்றதன்பின்னர் கடப்பதற்கு தயாராகுங்கள்.
புகையிரம் 100-500 m களில் வரும்போதே மிகுந்த அவதானத்துடன் கடவைக்கு வெளியே காத்திருங்கள் நீங்கள் செல்லும் வாகனத்தின் இயந்திரத்தினை நிறுத்திவிட்டு ஒருகணம் புகையிரதம் கடந்துசெல்வதைக்கவனியுங்கள். கடவையை கடக்க நேரம் உகந்ததாக இருக்கும்போது வேகமாக விரைவிலும் விரைவாக கடந்துசெல்லுங்கள்.
உங்களுடைய அவசரங்களுக்கு கட்டுப்போட்டு பாதுகாப்பற்ற கடவைகளில் காத்திருந்து கடவைதனைக் கடவுங்கள் உயிரிழப்புகளை இழந்து உறவுகளை துக்கத்தில் ஆழ்த்தாதீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்துங்கள் உயிரின் உயர்மதிப்பினை கடவைக்குள் தொலைத்துவிடாதீர்கள்.
உயிர்பறிக்கும் காலன் புகையிரதக் கடவைகளில் ஆங்காங்கே கடைபோட்டு இருப்பதனை உணருங்கள். உங்களை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள். இரண்டுபக்கங்களும் அவதானியுங்கள் அவசரம் என்றாலும் மனதை அலைபாய விடாமல் பொறுமையுடன் பயணியுங்கள்.
எத்தனை உயிர்கள் புகையிரக்கடவைகளில் பலிகொடுக்கப்படுகின்றன. ஒவ்வொருகடவைகளும் பாதுகாப்புள்ளவையாக ஆக்கப்படவேண்டும். அனைவரும் அவதினத்துடன் கடவைகளை கடக்கவேண்டும். உங்கள் உயிரின் பாதுகாப்பு உங்களுக்கே உரியது. பாதுகாப்பற்ற கடவையை கடக்கும்போது காத்திருங்கள் நிதானியுங்கள் செல்லுங்கள்….








