வவுனியா கனகராயன்குள காட்டுக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவனைக் காணவில்லை!! ஒத்துழைப்பு தாருங்கள்!
ஒத்துழைப்புத்தாருங்கள்…..
இன்று அதிகாலை காட்டுக்குச்சென்று இதுவரை வீடுதிரும்பாத கனகராயன் குளம் குறிசுட்டகுளம் இளைஞனைத் தேடும்பணிகள் தொடர்கின்றது.
இதுவரை வீடு திரும்பாத பல்கலை பயில் நிலை மாணவனைக்காணாது அவனது குடும்பமும் உறவுகளும் ஊரும் துயரத்தில் ஆழ்ந்து போயுள்ளார்கள்.
குறித்த இளைஞனைக்கண்டுபிடிப்பதற்காக
குறித்த இளைஞன் சென்றதாகக்கருதப்படும் காட்டுப்பகுதியில் நாளை காலை மீளவும் தேடுதல் பணிகள் தொடரவுள்ளது.
எனவே உடல் ஆரோக்கியம்மிக்க, காட்டு அனுபவம் சற்றேனும் உள்ள இளைஞர்களில் இயலுமானவர்கள் பெரியவர்களில் இயலுமானவர்கள் இம்மனித நேயபணிக்காக எம்முடன் கைகோருங்கள் என அன்பாக வேண்டுகின்றோம்.
நன்றி
கனகராயன்குளம் இளைஞர்கள்


