புதினங்களின் சங்கமம்

கதிர்காமர் வீதிப் பகுதியில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலையால் பரபரப்பு (Photos)

மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் மக்கள்
குடியிருப்புக்குள் புகுந்த இராட்சத முதலையால் அந்த பகுதியில்
அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. நீண்ட முயற்சியின் பின்னர் முதலை
பிடிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

நேற்று இரவு (09) இந்த சம்பவம் நடந்தது.

பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே 12
அடி நீளமான இராட்சத முதலை புகுந்தது. இதனால் அந்த பகுதியில்
பெரும் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய பிரதேச இளைஞர்கள் இரண்டு
மணித்தியாலத்திற்கும் மேலாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு முதலையை
மடக்கிப் பிடித்தனர்.

Image may contain: outdoor and water

உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு, முதலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Image may contain: one or more people