பூநகரியில் கொடூரம்: 3 பிள்ளைகளின் தாய் கொலை! – சந்தேகத்தில் கணவர் கைது!

பூநகரி பகுதியில் இன்று மாலை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் 3 பிள்ளைகள் தாய் எனத் தெரியவந்துள்ளதுடன், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் இன்று (ஜன-17) பி.;பகல் 3.00 மணியளவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)