புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழகம் போவது சாவதற்கா !! வைத்திய மாணவனுக்கு நடந்தது என்ன?(Vidoe)

இலங்கை பல்கலைக்கழகங்கள் செத்து விட தோணும் இடம் தானா…?

அண்மையில் மன்னாரை சேர்ந்த மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன் பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்டது என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அவன் செய்தது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க இப்படியான மன அழுத்தங்கள் வர காரணம் என்ன..?அதற்கான தீர்வுதான் என்ன..?

இந்த மாணவன் போலவே இரு வருடங்களுக்கு முன்னரும் ஒரு மாணவன் தற்கொலை செய்துள்ளான்…. அது தொடர்பாகன வீடியோவுக்கு இங்கே அழுத்துங்கள்

பல்கலைக்கழக கல்வி என்பது படிக்கிற யாவரதும் முதற் கனவு எனலாம்.உயர்தரம் படிக்கிற போது அந்த கனவு முத்தி வெறியாகிவிடுவதும் உண்டு.பரீட்சை பெறுபேறுகள் சரியாக வராமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.நாமெல்லாம் உயர்தரம் படித்து கம்பஸ் போனால் காணும்.பட்டம் நிச்சயம் என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்.பல்கலைக்கழகங்களில் எதிர்பாராத பிரச்சனைகள்,மன அழுத்தங்கள் வரும் என யாரும் சொல்லி அனுப்புவதில்லை.பாடசாலை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ ஒருவன் பல்கலைக்கழகம் போனதன் பின்னர் அவனது பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை.இங்கே தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது.

சமூகம் தன் மீது வைத்திருக்கின்ற எதிர்பார்ப்பை அடைய முடியாத நிலை வரும் போது இந்த மன அழுத்தம் வந்துவிடுகிறது.பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முதலே பல்கலைக்கழக மாணவர்கள் வீடு தேடி வந்து பகிடிவதை செய்ய ஆரம்பித்து விடுவர்.பிறகு உள்ளே போனதும் கூட ஒரு 3 மாதங்கள் இதே தான் நடக்கும்.ஆண்களும் பெண்களும் கூனி குறுகி போய் விடுவர் இந்த நாட்களில் எனபது உண்மை.

தொடர்ந்து முதலாம் கல்வியாண்டு என்பது சவாலாக அமையும்.ஏனெனில் இந்த Special Degree ,General Degree ஐ தீர்மானிக்கும் ஆண்டு இதுதான்.விரிவுரையாளர்கள் எவரும் மாணவர்களை பக்குவத்தோடு அரவணைக்க தவறிவிடுகிறார்கள்.ஒரு வித நட்பு மனப்பாண்மையை இவர்கள் அடையத்தவறி விடுகிறார்கள் என்று கூட சொல்லலாம்.முதல் நாள் விரிவுரைகளிலேயே மாதம் பல லட்சம் சம்பளம் வாங்கும் Associat Professor/
Professor மார்கள் மாணவர்களை வெருட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

பல்கலைக்கழக கல்வி இலகு,போனால் பட்டத்துடன் வெளியே வந்துவிடலாம் என சொல்லி அனுப்பப்பட்ட மாணவன் நிலைகுலைந்து போய்விடுவது இந்த இடத்தில் தான்.எந்த ஒரு விரிவுரையாளரும் இந்த பாடம் மிக இலகு,கவலைப்படாதீர்கள் என கூறி இலகு வழிகளை சொல்லிக்கொடுத்து படிப்பித்ததை நான் காணவில்லை.

இவற்றை எல்லாம் தாண்டி வெளியே வர ஏற்கனவே அடிப்பட்ட ஒரு மாணவனால் மட்டுமே முடியும்.மருத்துவ துறை சார் கல்வியை படிக்கும் மாணவர்கள் கூட வீட்டில் புறொய்லர் கோழி வளர்ப்பதை போல பொத்தி பொத்தி தான் வளர்க்கப்படுகிறார்கள்.சிலர் விதிவிலக்கும் உண்டு.இவர்களால் இப்படியான பிரச்சனைகள் வரும்போது அதனை தாண்டிவர முடிவதில்லை எனவும் சொல்லலாம்.

பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.அல்லது பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள்.அந்தவகையில்

☝️பகிடிவதை
☝️பாடத்தெரிவுகள்
☝️விரிவுரையாளர்களது பக்குவம் அற்ற தன்மை
☝️மாணவர்களது மனநிலையை விரிவுரையாளர்கள் புரிந்துகொள்ள தவறுகின்றமை
☝️மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை இனம் கண்டு அதற்கான ஆற்றுப்படுத்தல் பொறிமுறைகளை சிறப்பாக கொண்டிராமை
☝️பல்கலைக்கழக விதிமுறைகள்
☝️ஆங்கில பரீட்சைகள்
☝️காதல் தோல்விகள்

☝️️விரிவுரையாளர்கள் தவறாக படிப்பித்து அவர்களை சுட்டிக்காட்டினால் அவரது பாடம் சித்தியடைய முடியாது.
☝️அவர்களை எழும்பி கேள்வி கேட்க முடியாது..
☝️நீ பாஸ் பண்ணி வெளியே போவதை நானும் பார்க்கிறேன் என பாடங்களை Fail ஆக்குவது..
☝️தொடர்ச்சியா ஒரு பாடத்தை fail ஆக்கி பல வருடங்கள் அவனை பல வருடங்கள் பட்டம் எடுக்க விடாமல் பண்ணுவது.
☝️திறமையான மாணவர்களை உள்வாங்காது தமக்கு ஆதரவான அல்லது உறவினர்களை உள்வாங்குவது
☝️இறுதி ஆண்டு பரீட்சை பெறுபேறுள் இரண்டையும் தனித்தனியே வெளி விடாமல் சேர்த்து வைத்து வெட்ட வேண்டிய ஆட்களை வெட்டி வெளியே தள்ளுவது.

இப்படி பலவற்றை தாண்டித்தான் அவன் வெளியே வரவேண்டியிருக்கிறது.இப்படியான மேற்சொன்ன பிரச்சனை ஒன்றிலாவது மாட்டுப்படாமல் எந்த ஒரு மாணவனாலும் வெளியே வரமுடியாது.எனவே மன தைரியம் உள்ளவர்கள் நொந்து நூலாகி வெளியே வர சில மாணவர்கள் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.
நன்றி Sk Sathees