யாழ் பண்ணை கடற்கரையில் நின்ற காதலர்கள்!! ரணிலுக்கு ஏற்பட்ட கிளுகிளுப்பு!! என்ன சொன்னார்?
இன்று (3) யாழ்ப்பாணம் வேலணையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக யாழ் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைக் கடற்கரையால் சென்ற ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
நான் இங்கு வந்தபோது கோட்டையையும் அதன் முன்னாலுள்ள பூங்காவையும் கடந்துதான் வந்தேன். சில இளைஞர்கள் கையில் ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் கரங்களை பிடித்துக் கொண்டு நடைபயின்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உட்கார்ந்து கதைபேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இது சுதந்திர யாழ்ப்பாணம்.
கொழும்ப விகாரமாதேவி பூங்காவைப் போலிருக்கிறது. இந்த சுதந்திரம் அண்மையில்தான் வந்தது. இதற்கு முன்னர் அப்படியான நிலைமையிருக்கவில்லை. பயம்தான் இருந்தது. அந்தப்பக்கம் போனால் யாராவது விரட்டியடித்து விடுவார்கள். இன்று யாழுக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திரம் இருக்கிறது. 2015 ஜனவரி 8இல் அன்னப்பட்சிக்கு நீங்கள் புள்ளடியிட்டதால் இது ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.
இதே வேளை ஐ.தே.க யாழ் மாவட்ட பொறுப்பாளராக உள்ள விஜயகலாவின் அடியாட்கள் பலரும் கள்ளக்காதல் விளையாட்டுக்களில் கை தேர்த்தவர்கள் என பொதுமக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

