உயர்தரப் பரீட்சையில் டொக்டராக சித்தியடைய சந்திரிக்காவுக்கு ஒரு புள்ளியே குறைவு!! மகிந்த சொன்ன கதை!! (Video)
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதேபோல் ஹம்பாந்தோட்டை மாவட்ட சட்டத்தரணிகளையும், வைத்தியர்களையும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
இங்கு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ வைத்திய பீடத்திற்கு செல்ல சந்திரிக்கா அம்மையாருக்கு ஒரேயொரு புள்ளி மாத்திரமே குறைவடைந்தாக தெரிவித்தார்.
அப்போது வைத்தியராகுவதை விட ஜனாதிபதியாகுவது இலகுவானது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று எட்டாம் வகுப்பில் கூட சித்தியடையாத ஒருவர் நாட்டை நிர்வகிக்க அதிகாரத்தை கோருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் ஜனாதிபதியின் புதல்வன் என்பதால் அவருக்கு பட்டம் ஒன்று வழங்கப்பட்டதாகவும் அது மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை போன்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

