சுவிஸ்லாந்தில் ஈழத்தமிழனுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல்!! நடந்தது என்ன?? (video)
ஜெனிவா முன்றலில் ஈழத்தமிழருக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.சி ஊடகம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. குறித்த வீடியோவை தமிழில் காணொளி என்று பதிவிடுவதற்குப் பதிலாக காணொலி என கருத்துப் பிழையுடன் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த தகவலை நாம் அப்படியே தருகின்றோம்.
ஈழத்தமிழருக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல் நிலை! (காணொலி)
ஜெனிவா முன்றலில் ஈழத்தமிழருக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து ஸ்ரீலங்கா விலகுவதாக உத்தியோகபூவர்வமாக அறிவித்திருந்தது.
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் ஸ்ரீலங்காவின் இந்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு பல நாடுகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஜெனிவா முன்றலில் ஈழத்தமிருக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொலி…

