புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துக்கல்லுாரியை நாசமாக்கிய சிவலிங்கப்புளியடி வீட்டில் தற்போது நடப்பது என்ன?

யாழ்ப்பாணத்தில் முக்கிய பொலிஸ் அதிகாரிகளை தனது கைக்குள் போட்டுக் கொண்டு மீற்றர் வட்டிக்கு கொடுத்தும் நாட்டாமை வேலைகள் மற்றும் பல சட்டவிரோத வேலைகள் செய்து வந்த விஜிதா மில் முதலாளியின் வீடு யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சிவலிங்கப்புளியடியில் உள்ளது. இந்த வீட்டில் இருந்தே பல சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் யாழ் இந்துக்கல்லுாரியை நாசமாக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.

தற்போத அந்த வீட்டில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் தங்கியிருந்து கோத்தாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்பாக யாழ்ப்பாண கல்விச்சமூகம் பெரும் விசனமடைந்துள்ளது. மீற்றர் வட்டிக்கு கொடுப்பவின் வீட்டில் இருந்து கோத்தாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மக்கள் வாக்களிப்பார்களா? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக கோத்தாவுக்கு நெருக்கமானவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது விஜதா மில் முதலாளி கோத்தாவிடம் தங்களின் ஆதரவாளர் என தமக்கு தமக்கு கடிதம் தருமாறு கேட்டதாகவும் ஆனால் கோத்தா அதற்கு மறுத்து அவர்களை துரத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கோத்தவிடம் இவர்களைப் போன்றவர்களின் பருப்பு வேகாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கோத்தாவின் அலுவலகம் சிவலிங்கப்புளியடியில் தொடந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.