Home புதினங்களின் சங்கமம் இந்த பச்சைக் கள்ளியை கண்டால் உடனே அறிவியுங்கள்!! நடந்தது எனன?

இந்த பச்சைக் கள்ளியை கண்டால் உடனே அறிவியுங்கள்!! நடந்தது எனன?

நுவரெலியா உணவகத்தில் தவறவிடப்பட்ட மாணவியின் கைப்பை: ஆவணங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை
நுவரெலியா நகரிலுள்ள உணவகம் ஒன்றில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் ஹட்டனைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 09ஆம் திகதி குடும்பத்தினருடன் நுவரெலியா உணவகத்தில் மதிய உணவு உட்கொண்டபோது தனது கைப்பையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் உணவகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, அங்கு வந்த மற்றொரு பெண் அதனை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.
குறித்த கைப்பையில் 50 ஸ்டேர்லிங் பவுண்கள் பணத்துடன், மாணவியின் இலங்கை தேசிய அடையாள அட்டை, பிரித்தானிய வங்கி அட்டைகள், விசா அட்டை மற்றும் பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவை இருந்துள்ளன.
தாம் விரைவில் பிரித்தானியா திரும்பவுள்ளதால், கைப்பையிலுள்ள பணம் தேவையில்லை எனவும், அத்தியாவசிய ஆவணங்களை மட்டும் மீள ஒப்படைத்தால் பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாகவும் அம்மாணவி தெரிவித்துள்ளார். தவறுதலாக எடுத்துச் சென்றிருந்தாலும் அதனை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
நுவரெலியா பொலிஸ் நிலையம்: 071 859 1097 / 052 222 2222
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments