புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கச்சான் விற்கும் பாட்டியின் பரிதாபக் கதை இது!! (Photos)

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக கண்டேன். “கச்சான் ஆச்சி”. என்று ஒரு தகர கூட்டில் கச்சான், ரொபி விற்று வருகிறார். 

பலத்த மழை காரணமாக நான் வீதி ஓர கடை ஓரமாக நிற்கும் போது ஆச்சி யும் ஒரு குட்டி மகளும் அந்த தகர கூட்டில் இருந்து மழை வெள்ளம் காரணமாக ஓடி வந்தனர் .

அப்போது மெதுவாக கதைத்தன் ஆச்சி யுடன் .. ஆச்சிக்கு ஒரு ஆம்பிளை பிள்ளையை ஆமி பிடிச்சு கொண்டு போட்டுது .. மற்ற பெண்பிள்ளை வீரச்சாவு .. மற்ற ஆம்பிளை பிள்ளை வெளி நாட்டு க்கு போய் பெத்த அம்மாவை அப்பாவை கை விட்டுவிட்டார் ( தொடர்பு இல்லை) .. இப்படி ஆச்சியின் கண்கள் கலங்கியது ..

அவரது கடைசி பெண் (மனநோய்) பிள்ளையின் மகளை மகள் கைவிட்டு சென்ற நிலையில் ஆச்சி அந்த பெண் குழந்தை யை தாய் போல் பார்த்து வருகிறார்..

அவரது கணவர் க்கு வருத்த்திலும்
“தாங்கள் கஞ்சியை கடிச்சாலும் பிள்ளை க்கு சோறு கொடுத்து வளர்த்து விடுவோம்” என்று மனம் தளராமல் நம்பிக்கை யில் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்..

காணமல் ஆக்கபட்ட தனது மகன் கிடைக்க மாட்டாரா என்று ஏக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்.

கை ஏந்தாமல் வாழனும் என்டு தினமும் பாடசாலை முடியும் நேரம் 11am -2 Pm கச்சான் விற்று வருகிறார்.

தினமும் கச்சான் விற்பதற்காக பஸ்ஸில் வந்து செல்கிறார். ஒரு நாளைக்கு லாபம் கையில் வருவது போல் தெரியவில்லை.

பத்மநாதன் பத்மராணி ( ஆச்சி )
ஊற்றுக்குளம்,
கிளிநொச்சி.

தொடர்பு எண் விரைவில் தருகிறேன்.

உறவுகளே உங்களால் ஏதேனும் சிறு உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள்… முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள் !!!

நன்றி பேஸ்புக்

– பிரதி செய்யப்பட்டது

Image may contain: 1 person, standing and outdoorImage may contain: outdoorImage may contain: 1 person, standing, beard and outdoor