புலம்பெயர் தமிழனின் திருவிளையாடல்!! யாழில் இருவர் கைது!! நடந்தது என்ன?
வெளிநாடு செல்வதற்கு கொடுத்த பணத்தைக் கேட்கச் சென்றவருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.
பணம் கேட்கச் சென்றவரும் அவருடன் உதவிக்குச் சென்றவரும் நீதிமன்றினால் தலா இரண்டரை லட்சம்
ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடுத்த பணத்தைக் கேட்பதற்காக நால்வருடன் சென்ற நபர், பணம் கொடுக்காது விட்டால் கொலை
செய்து விடுவதாக பணம் வாங்கியவரை அச்சுறுத்தியுள்ளார்.
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் மீசாலையைச் சேர்ந்த இருவரைக்
கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இருவரையும் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில்
செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.