Home புதினங்களின் சங்கமம் லண்டன் செல்வதற்காக கள்ளப்படகில் தமிழ்நாடு சென்ற 3 வெங்காயங்கள் பிடிபட்டனர்!

லண்டன் செல்வதற்காக கள்ளப்படகில் தமிழ்நாடு சென்ற 3 வெங்காயங்கள் பிடிபட்டனர்!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், சட்டவிரோதப் படகு மூலம் தமிழகத்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் மூவரை ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதமாகத் தமிழகத்துக்குப் படகு மூலம் அழைத்து வருவதற்கு 1.10 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த இலங்கையர்கள், டெல்லிக்குச் சென்று, அங்கு போலி கடவுச்சீட்டு பெற்று லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments