🚨 யாழ். பிரவுன் வீதிச் சந்தியில் விபத்து – மூவர் காயம்!
யாழ்ப்பாணம், பிரவுன் வீதிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் வயோதிப முச்சக்கர வண்டிச் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




