இராவணன் இலங்கையில் சீதையை மறைத்து வைத்திருந்த குகை இதுதான்!!! அற்புதக் காட்சிகள் இதோ (Videos)
ராவண குகை இலங்கையின் பதுளையின் எல்ல நகரத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், பண்டாரவளையிலிருந்து 11 கிமீ (7 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
தொகுப்பு- Arshad Gafoor (Tamil Travel Blogger)
இது ஒரு சிறிய குகை, இது சுமார் 50 அடி அகலம், 150 அடி நீளம் மற்றும் 60 அடி உயரம் கொண்டது. சீதா இளவரசியை கடத்தி வந்த ராவனண் ஒளித்து வைக்க இந்த குகையை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 1,370 மீ (4,490 அடி) உயரத்தில் ஒரு குன்றின் அஸ்திவாரத்தில் அமைந்துள்ளது,
வட,மற்றும் தென் இந்திய சுற்றுலா பயணிகள் அதிகளவாக வருகைதரும் வரலாற்று மதிப்பைக் கொண்ட இந்த குகை இலங்கையில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக தற்போது மாறி வருகின்றது.
இந்த குகைக்கு 1KM தொலைவில் மகா ராவண விகாரை எனும் ஒரு புத்த மத விகாரை அமைந்துள்ளது. குகையை நோக்கிச் செல்ல செங்குத்தான பாதையில் கிட்டத்தட்ட 750 கடினமான படிகளில் ஏற வேண்டும் சில இடங்களில் எந்த படிகளும் இல்லை பாறைகள் தான் உள்ளது.
இந்த சுரங்கங்கள் இராவணன் மன்னனின் கட்டடக்கலை திறனை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. சுரங்கங்கள் மலைகள் வழியாக விரைவான போக்குவரத்து வழிமுறையாகவும் இரகசிய வழிப்பாதையாகவும் செயல்பட்டிருக்கின்றன
இந்த சுரங்கங்களை உற்று நோக்கினால் அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை, இயற்கையான வடிவங்கள் அல்ல என்பதைக் குறித்துக்காட்டுகின்றது
குறிப்பு- Adventure Travel பிரியர்களுக்கு இந்த குகையின் அருகே மேலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது அதை எனது அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் நண்பர்களே
















