புதினங்களின் சங்கமம்

கனடா புலம்பெயர் அன்ரியின் ஆடைகளை உரிந்து வெற்று உடம்பில் பூசை! வீடியோவும் எடுத்த ஐயர் பிடிபட்டது எப்படி?

ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.

நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.

நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.
இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.

இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x