புதினங்களின் சங்கமம்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி தேசிய அடையாள அட்டை தொடர்பான விசாரணைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அடையாள அட்டை கிடைக்காத பரீட்சை விண்ணப்பதாரிகள் 0115 226 115 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.