சிறுமியை கற்பழித்து யாழ் நீதிமன்றால் 24 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்ட காவாலி காவலில் இருந்து தப்பி ஓட்டம்!! நடந்தது என்ன?
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
கைதி தப்பி சென்ற நிலையில் ,சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் , மறுநாள் சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

