யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் , வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனையிட்டதுடன் , அதில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவரிடமும் சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் போதைப்பொருள் காணப்பட்டமையை அடுத்து இருவரையும் கைது செய்தனர்
அதன் போது, யாழ்ப்பாண நகர் பகுதியை சேர்ந்த ஒருவரும் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஒருவருமாக கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும், 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது
அத்துடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றிய பொலிஸ் விசேட அதிரடி படையினர் , கைது செய்யப்பட்ட இருவரையும் , போதைப்பொருள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



