மல்வத்தை விபத்தில் பரிதாபகரமாக பிரிந்த இளைஞனின் உயிர்
விபத்தில் மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மல்வத்தையில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்!
அம்பாறை மாவட்டம், மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை சற்று முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கி மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





