புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இரு ரவுடிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் ,கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.

குறித்த 09 நபர்களையும் எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு , மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன

இந்நிலையில் , குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்ட வேளை , 09ஆம் எதிரி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் ,09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி , ஏனைய 08 எதிரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் , 08 பேரையும் மன்று விடுவித்தது.

அதேவேளை ,பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் , இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து ,மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x