லண்டனிலிருந்து வந்த 37 வயதான சொந்த மாமனுடன் தலைமறைவான யாழ் பல்கலைக்கழக மாணவி!! காதலன் நிர்க்கதி!!
தனது தாயின் சொந்த தம்பியாரான குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளார் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்கும் 22 வயதான மாணவி. தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவிக்கு காதலன் ஒருவரும் இருந்துள்ளர். இருவரும் பாடசாலையில் கற்கும் போதே காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் மாணவி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய போதும் காதலன் தெரிவாகவில்லை. தற்போது மாணவியின் காதலன் கல்வியற்கல்லுாரிக்கு தெரிவாகியுள்ளதாகவும் அங்கு தங்கிியிருந்து கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
இருவரும் கற்றல் செயற்பாட்டை முடித்த பின் திருமணம் செய்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் முடிவு எடுத்திருந்தனர். இந் நிலையில் கடந்த வாரம் தென்மராடச்சிப் பகுதியில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் நடக்கும் திருவிழாவிற்காக லண்டனிலிருந்து மாணவியின் தாயின் இளைய சகோதரரான 3 பிள்ளைகளுக்கு அப்பாவான மாணவியின் மாமன் வந்து தனது அக்காவின் வீட்டில் தங்கியிருந்த பின்னரே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற மாணவியைக் காணாது பெற்றோர் தேடத் தொடங்கிய போது மாணவி பெற்றோருக்கு தொடர்பு எடுத்து தான் மாமனுடன் வாழ்க்கை நடாத்தப் போவதாகக் கூறியுள்ளார். இந் நிலையில் லண்டனில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் மனைவி தனது கணவன் மற்றும் மருமகள் கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை வரவுள்ளதாகத் தெரியவகின்றது.

