புதினங்களின் சங்கமம்

தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி..! நீண்ட காலமாக பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது!

அம்பாறை பகுதியில் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அம்பாறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

👮‍♀️ கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

📌 குறித்த ஆசிரியர் நீண்ட காலமாக பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📝 இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆரம்ப விசாரணைகளின் பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

🔍 அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரையின்பேரில், பதில் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x