யாழ் காட்டுப் பகுதிக்குள் அரசியல்வாதியின் விளையாட்டு!! தீவிர தேடுதலில் மீட்கப்பட்ட போதைப் பொருள்!!
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது,
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட விரோத பொருள்
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

