புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 15 வயதான கெட்டிக்கார மாணவி மரணம்! ஏன் இந்த முடிவு?

கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையில் கற்றல் அடைவுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்ந்து வந்த குறித்த மாணவியின் திடீர் மரணம் பாடசாலைச் சமூகத்தையும், கிராம மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச் சிகிச்சைக்கான திகதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மாணவி மன உளைச்சலால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x