கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களை பிரதேச சபையில் இருந்து வெளியேற்றியமை தொடர்பாக குறித்த சபையின் வருமான வரி பரிசோதகர் பவ கீர்த்தனனை ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான 4 ஆட்பிணையில் செல்வதற்கு நீதான் உத்தரவிட்டார்.
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றியமை தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை பருத்தித் துரஎ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், குறிப்பாக வருமான வரி பரிசோதகர் பவகீர்த்தனன் என்பவர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு, அவருக்கு தலா ரூ. 100,000 பெறுமதியான நான்கு ஆள் பிணைகளில் இன்று பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் அந்த பிரதேச சபையில் பணிபுரியும் நான்கு ஊழியர்கள் தங்களது வருகையை அலுவலகத்தில் பதிவு செய்து, கடமை நேரத்தில் அவருக்கான பிணை கையொப்பம் இடுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமையும் அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த நபர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை சபையில் இருந்து அடாத்தாக அச்சுறுத்தும் வகையில் வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.





