புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கைத் தமிழ் பெண் டொக்டர் லக்சனாவுக்கு கனடாவில் 5 லட்சம் டொலர்கள் அபராதம்!! நடந்தது என்ன?

கனடாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு, 5 லட்சத்து 25 ஆயிரத்து 725 டாலரை திருப்பி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைத்தியராகப் பணியாற்றும் லக்‌ஷனா சிவானந்தன் என்பவருக்கு எதிராக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

அரசு நிதியுடன் வைத்திய பயிற்சியை முடித்த பின்னர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனினும், பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அதனை மீறியமையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில் அயர்லாந்தில் மருத்துவ படிப்பை முடித்த லக்‌ஷனா சிவானந்தன், 2021-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதற்கமைய, யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா மருத்துவ பயிற்சியை முடிக்க அரசு நிதி உதவி வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின்படி, பயிற்சியை முடித்த பின்னர் மாகாணத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் லக்‌ஷனா பணிபுரிய வேண்டும்.

ஆனால், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயிற்சியை முடித்த அவர், மாகாணத்தில் பணிபுரிய விரும்பவில்லை என அரசுக்கு தெரிவித்தார். பயிற்சியை முடித்த பின்னர் லக்‌ஷனா, ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கிவிட்டார்.

அரசு வழங்கிய நிதி உதவியான 5 லட்சத்து 25 ஆயிரத்து 725 கனடிய டாலர்களை திருப்பி தருமாறு கேட்டபோதும், அவர் அதை செலுத்தவில்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு குற்றம் சாட்டுகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் சிவானந்தன், ஒப்பந்தத்தை நிறைவேற்றவே தான் விரும்பியதாகவும், ஆனால் தனிப்பட்ட இழப்பு மற்றும் குடும்ப கடமைகளால் தான் ஒன்டாரியோவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார். இதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவும், அரசு நிதியை திருப்பி செலுத்தவும் சுகாதார அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x