புதினங்களின் சங்கமம்

அம்மாவையும் அப்பாவையும் வெட்டிக் கொன்ற மகன்!

10 மாதம் சுமந்து பெற்ற தாயையும் 26 வருடம் பாராட்டி சீராட்டி வளர்த்த தந்தையையும் வெட்டிக்கொன்ற மகன் கைது – எம்பிலிப்பிட்டியில் சம்பவம்

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலாபிட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x