யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் மரணம்!
யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்,
*.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர்
*.நிர்வாகத்திறன் கொண்டவர்
*.சிறந்த ஆளுமை மிக்கவர்.
*.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர்
*.மருத்துவர்கள் , பணியாளரகள்,நோயாளர்கள் என அனைவருடனும் அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர்
*. 31 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றியவர்.
பதவி நிலையில்…….
03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில்
மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
*.02 வருடங்கள் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
மீண்டும் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்று அதன் பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

