புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா சென்றும் திருந்தவில்லை!! ATM இல் பணம் எடுத்தவர்களிடம் கொள்ளையடித்த சுரேஸ் பிடிபட்டது எப்படி?

Brampton நகரில் பல ATM கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Brampton நகரில் பல மாதங்களாக தொடர்ந்த ATM கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நிலையான முகவரி இல்லாத 34 வயதான சுரேஷ்குமாரன் ராஜபுத்திரன் என அடையாளம் காணப்பட்டார்.

செவ்வாயகிழமை (16) கைதான அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.

Peel பிராந்திய காவல்துறையின் கூற்றுப்படி, March முதல் June மாதங்களுக்கு இடையில், Chinguacousy Road – Queen Street East பகுதிகளில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி இயந்திரத்தில் இருந்து பணத்தை பெறும் வரை சந்தேக நபர் ATM அறைகளுக்குள் காத்திருந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முடித்தவுடன், சந்தேக நபர் அவர்களைத் தாக்கி அவர்களின் பணத்தைத் திருடிச் சென்றார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முதியவர் என காவல்துறை தெரிவித்தது.

கைதானவருக்கு எதிராக மூன்று கொள்ளைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பொது மக்கள் எல்லா நேரங்களிலும் தங்கள் சுற்றுப்புறம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ஒரு செய்திக் குறிப்பில், Peel பிராந்திய காவல்துறை நினைவூட்டியுள்ளது.

செய்திக் குறிப்பு ஒன்றில், பீல் பிராந்திய காவல்துறை, குடியிருப்பாளர்கள்

குறிப்பாக ATM பயன்பாட்டின் போது இதனை மனதில் வைத்துக் கொள்ளுமாறு காவல்துறை கூறியது.

இதில் கைதானவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x