யாழ்.சென் பொஸ்கோவில் 171 மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறு
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2019ஆம்
ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 258 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி
171 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர் என்று கல்லூரியின்
அதிபர் தெரிவித்தார்.
அத்தோடு மாணவன் கேசவன் தர்ஷன் 194 புள்ளிகளைப் பெற்று எமது
பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றும் அவர் மகிழ்ச்சி
தெரிவித்தார்.
கடந்த வருடம் 50 வீதமான மாணவர்கள் சித்தி அடைந்தன். எனினும் இம்முறை 66
சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்றும் யாழ்ப்பாணம் புனித
ஜோன் பொஸ்கோ வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.

