புதினங்களின் சங்கமம்

மாரித் தவக்கை போல் தொடர்ச்சியாக கத்தாமல் சைக்கிள் கட்சி இதை கவனிக்க வேண்டும்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

MP கஜேந்திரன் vs ஜனாதிபதி அனுர.
####தேசியமக்கள் சக்தியிடமிருந்து முன்னணி பலவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.அல்லது கற்றுக்கொள்ளவேண்டும்.3 mp க்களை மட்டும் வைத்திருந்த Jvp யால் எப்படி சிங்களமக்களின் பெரும் திரட்சியை தங்களைநோக்கி ஈர்க்கமுடிந்தது. பாரம்பரிய கட்சிகள் பணபலம் அதிகார செல்வாக்கு நீண்டு பளக்கப்பட்ட முகங்கள் யுத்தவெற்றி மயக்கம். ஊடக இருட்டடிப்பு.

எல்லாவற்றையும் உடைத்து அனுர எப்படி தன்னை முன்நிறுத்தினார். என்பதனை முன்னணி அவதானிப்பை செலுத்தவேண்டும்.முன்னணி தன்னை அரசியல் இயக்கமாக காண்பிக்கிறது ஆனால் அவ்வாறு தெரியவில்லை.

Jvp தன்னை கட்சிரீதியாக பரந்துபட்டளவில் பலத்த கட்டமைப்புக்களை கொண்டிருக்கிறது சிறப்பான தொழில் சங்கங்களை கொண்டிருக்கிறது.கட்சிசார்ந்து ஓவ்வொரு தளமாக பிரிவாக இடைவிடாது கலந்துரையாடுகிறது. ஆனால்.

தன்னை மக்கள் இயக்கமாக சொல்லும் முன்னணிக்கு எந்தவித கட்சி கட்டமைப்பும் கிடையாது.கட்சி கலந்துரையாடல் பூச்சியம்.தன்னை மேலெலுந்தவாரியாகவே முகத்தை காட்டி செல்கிறது.கட்சிசார்ந்த கலந்தரையாடல் தளமே (வகை) 10 மேல் இருக்கவேண்டும் .

எதுகுமே இல்லை..

கொள்கை உறுதிப்பாடு நேர்மை இருந்தால் மட்டும் கானாது. மக்களை எவ்வாறு தங்களை நோக்கி (கொள்கையை நோக்கி)அணிதிரட்டமுணியும் என்பதற்கான உபாயங்களை கையாளவேண்டும்.உதாரணமாக புறக்கணிப்பை அறிவித்துவிட்டு 4 இடத்தில் துண்டுபிரசுரங்களை கொடுத்துவிட்டால் மட்டும் பத்தாது.4 ஊடகசந்திப்பு 20 போராட்டத்தால் மட்டும் தமிழ்தேசிய அரசியலை திரட்சியாக்கமுடியாது.தமிழ் தேசியம்சார் கருத்துக்கள் அடிமட்டம்வரை உரையாடப்படவேண்டும்.கட்சி அதற்காக கட்டமைக்கப்பட வேண்டும்.இல்லையேல் தமிழ்தேசியமக்கள் முன்னணி வீழ்ச்சிகாண்பது மட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலும் வீழ்ச்சிகானும்.

உங்களிற்கு கோவம் வரலாம் எரிச்சல் வரலாம் இதனை நீங்கள் மறுக்கமுடியாது.கட்சி கட்டமைப்பை பலப்படுத்தாத வரை அடமட்டம்வரை உள்கிராமம்வரை உரையாடவரை தமிழ்மக்களை தேசமாக அணிதிரட்டவே முடியாது