புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முற்பட்டவருக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவு பகுதியினுள் மறைத்து இருவர் கஞ்சா மட்டும் ஹெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உணவு பொதிக்குள் மறைத்து தனது கணவரான போதைப்பொருள் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கணவருக்கு 05 மில்லி கிராம் ஹெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட போது கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மனைவியான பெண் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்

இதே வேளை யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த யாழ் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற போது யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவர் 05 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் சிறிய தொகை கஞ்சாவுடன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் இருவரையும் இன்று(07) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.