கிசு கிசு

வவுனியாவில் மகளுடன் பாலுறவு கொண்ட பொலிஸ்!! முதலிரவில் கண்டுபிடித்த கணவன் ??

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரான தந்தையொருவர், தனது சொந்த மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இவரது மகளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமானதன் பின்னர் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் பாலியல் உறவு தொடர்பான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தந்தை பாலியல் உறவில் ஈடுபட்டதை கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தம்பதிகள் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 21ம் திகதி முறைப்பாடு பதிவு செய்தனர். இதனையடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 21.03..2019 அன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றையதினம் (22.03.2019) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.