வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதி மின்வெட்டு நேர அட்டவனை விபரம்!!
நாடுமுழுவதும் சுழற்சிமுறையில் பகல் மற்றும் இரவுவேளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தும்
நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
*பகல் 3 மணிநேரம்*
இதனடிப்படையில் காலை 08:30 மணி தொடக்கம் முற்பகல்11:30 மணிவரை அல்லது முற்பகல் 11.30
தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை அல்லது பிற்பகல் 2.30 தொடக்கம் மாலை 5.30 மணிவரை பகல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
*இரவு ஒரு மணிநேரம்*
மாலை 06:30 மணி தொடக்கம் 07:30 மணிவரை அல்லது இரவு 07:30 மணி தொடக்கம் இரவு
08:30 அல்லது இரவு 8.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரையும் மின்வெட்டு
நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணை நாளை (25) திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழை இல்லாமை காரணமாக இந்த சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் பகல் வேளையில் மூன்று மணிநேரமும் இரவு வேளை ஒரு மணி நேரமும்
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.