புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம். முழுவதும் இன்று ஐந்து மணிநேர மின்தடை

யாழ். குடாநாடு முழுவதும் இன்று சனிக்கிழமை(05-10-2019) ஐந்து மணிநேர தொடர் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று நண்பகல்-12 மணி முதல் மாலை-05 மணி வரை இந்த மின்தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றுகாலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ். கந்தரோடை, சண்டிலிப்பாய், சண்டிலிப்பாய் வைரவர் கோவிலடி, ஆலங்குலாய், சங்கானை, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ளவேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான், பெரியவிளான், இளவாலை, மாரீசன்கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோலப் பட்டினம், குசுமாந்துறை, காட்டுப்புலம், மாகியப்பிட்டி, பெருமாள் கடவை,திருநெல்வேலியின் ஒரு பகுதி, திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், திருநெல்வேலி பாற்பண்ணைப் பிரதேசம், இராமலிங்கம் வீதி, ஆடியபாதம் வீதிச் சந்தி, யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம், திருநெல்வேலி தலங்காவில், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித்துறை வீதியில் நாகவிகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம் , 3 ஆம், 4 ஆம் குறுக்கு வீதிகள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக்கடைச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதேர்ண் சென்றல் வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி அலுவலகம், AVNOR பிறைவேற் லிமிட்டெட், Raja Talkies, LOLC, யாழ். புகையிரத நிலையம், சிறிநதியா நகை மாளிகை, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.