யாழ்ப்பாண பெண்களை வேட்டையாடும் நோர்வே மன்மதராசா!! புறோக்கர்மாரும் உடந்தை!! நடப்பது என்ன?
கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் மத்ரா எனும் இடத்தில் வசித்தும் வருபவருமான 42 வயதுடைய நிமல் ரஞ்சி மோகன் என்பவன் இலங்கையில் அப்பாவி தமிழ் யுவதிகளை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொணட பின் அவர்களைக் கைகழுவி விடுவதாகத் தெரியவருகின்றது.
இவன் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துள்ளதுடன், தற்போது திருமணத் தொடர்பு தளங்கள் ஊடாகவும் திருமணத் தரகர்கள் ஊடாகவும் இலங்கையைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள இளம் பெண்களை சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவன் திருமணத் தொடர்பு தளங்களில் தன்னைத் திருமணமாகாதவர் என அறிமுகப்படுத்தி பணம், பொருளாதார வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கிப் பெண்களுடன் நெருங்கிப் பழகுவதுடன், இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களை உல்லாச விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திவிட்டு அவர்களது தொடர்புகளைத் துண்டித்து விடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், அப்பாவிப் பெண்களை இலக்கு வைத்தே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இவன் தொடர்பாக இலங்கையில் உள்ள இளம் தமிழ்ப் பெண்களும் அவர்களின் பெற்றோரும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


