புதினங்களின் சங்கமம்

தமிழர் பிரதேசத்தில் கலியாண வீட்டில் நடந்த கடும் சண்டை! தடுக்கச் சென்ற பொலிசார் மீதும் தாக்குதல்! நடந்தது என்ன?

கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தலவாக்கலை வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களால் திருமண விழா ஒன்று இன்று (17) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்தவர்களில் மதுபோதையில் இருந்த இரு குழுவினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

தகவலறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து அந்த குழுவினரை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது மோதலில் ஈடுபட்டிருந்த குழுவினரால், அங்கு சமாதானத்தில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

அதனை தொடர்ந்து திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலும் ஒரு பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலை நடத்திய ஏழு பேரை பாரிய சிரமத்திற்கு மத்தியில் கைது செய்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்படுவதை நேரில் கண்ட பிரதேசமக்கள், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோதலில் காயமடைந்த மேலும் மூவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x