ஊரடங்கு சட்டத்தை மீறி சாவகச்சேரி நகரப்பகுதிகளில் நடமாடிய சுமார் 20 பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நாளை திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவிருந்த மணமகன் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுடன் வந்த லொறியில் கஞ்சா கெரோயின் ஐஸ் போதைப்பொருட்கள்!!!
மேலும், இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று வந்துகொண்டிருந்த மணமக்களின் உறவினர்கள் கைதுசெய்யப்படடனர். அத்துடன், அவர்கள் பயணித்த வாகனமும் பறிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மணமகன் தனது திருமண அழைப்பிதழை காண்பித்ததால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.





