அவுஸ்திரேலியாவில் இலங்கை மருத்துவர் மீது குஞ்சுமணியால் சேட்டை விட்ட குற்றச்சாட்டு! தண்டனை வழங்க ஏற்பாடு! நடந்தது என்ன?
அவுஸ்திரேலியாவின் பேர்த் (Perth) நகரில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுமருத்துவர் வினோ கரியகரவான (Vino Kariyakarawana) மீது சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பேர்த் மகிஸ்திரேட் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. 49 வயதுடைய மருத்துவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், ஒரு பெண் நோயாளியிடம் அனுமதியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான தொடுதல் இடம்பெற்றதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதிமன்றத்தில் வெளியான தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதுகு காயத்திற்கான தொடர்ச்சிச் சிகிச்சையாக அக்குபங்சர் (Acupuncture) அமர்வில் கலந்து கொண்ட 30 வயதுடைய சர்வதேச மாணவி ஒருவரிடம் மருத்துவர் ஒழுங்கு மீறிய உடல் தொடர்பு கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வழக்கின் போது, மருத்துவர் தரப்பு இது தவறுதலாக ஏற்பட்ட உடல் தொடர்பு என வாதிட்டபோதிலும், நீதிமன்றம் அந்த விளக்கத்தை நிராகரித்து, செயல் திட்டமிட்டதாகக் கருதி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றச்சாட்டு தொடர்பான சில வழக்குப் பிரிவுகள் முன்பே கைவிடப்பட்டிருந்தாலும், முக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றம் தண்டனைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்கிடையில், அவுஸ்திரேலிய மருத்துவப் பதிவுகளின்படி அவர் இன்னும் பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிபுணராகத் தொடர்கிறாரா என்பது தொடர்பாக பொதுமக்கள் கவனம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

